உம் அல் குரா நாட்காட்டி – ஓர் ஷரி'யத்து - (விரிவான விளக்கம்)

(அஹில்லாவின் அடிப்படையில் , திருமறையின் ஆதாரத்தில்)

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......அவன் அளவற்ற அருளாளன் நிகரில்லாக் கருணையாளன் !

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே !

அவனே தன்னுடைய அடியார் மீது இந்த வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்வித கோணலையும் (முரண்பாட்டையும்) வைத்துவிடவில்லை. இது உறுதியான ............... வேதமாகும்.

(18:1,2)

உமக்கு இவ்வேதத்தை  நாம் இறக்கியருளியுள்ளோம். அது யாவற்றையும் மிகத்தெளிவாக விவரிக்கக் கூடியதாய் இருக்கிறது.

(16:89)

அல்லாஹ்வின் திருத்தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்களின் மீதும் , அவர்களின் குடும்பத்தார் மீதும் , உத்தம ஸஹாபாக்களின் மீதும் , நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

இன்னந் தீன இன்ந்தல்லாஹில் இஸ்லாம்

நிச்சயமாக இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;.

(3:19.)

நூஹூவுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். மேலும் (நபியே) எதனை நாம் உமக்கு வஹியாக அறிவிக்கிறோமோ அதனையே, இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் உபதேசித்தோம். (ஆகவே , இறுதித் தூதரின் சமுதாயமே) ''நீங்கள் (அனைவரும் ஒன்றினைந்து) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், அதில் பிரிந்து  விடாதீர்கள்.'

(42:13.)

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் நான் உங்களுக்காக இஸ்லாமையே மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்.

(5:03)

(பரிபூர்ணமாக்கப் பட்டுவிட்ட) நம்முடைய இந்த மார்க்கத்தில் அதில் இல்லாததை எவன் புதிதாக புகுத்துகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) , நூல் : புஹாரி

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தைகளாகும் , வழிகளில் சிறந்தது அல்லாஹ்வின் திருத்தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்களின் வழியாகும் , மார்க்கத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு செயலும் பித்அத் ஆகும் , ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.

அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) , நூல் : முஸ்லிம்

இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மனோ இச்சையைப் பின்பற்றுபவனை விட மிகவழிகெட்டவன் எவன் இருக்கின்றான்;.

(28:50)

இறைவன் இவ்வுலகிற்கு அனுப்பியிருந்த அனைத்து இறைத்தூதர்களுமே ஒரே மார்க்கத்தை அதாவது தீனைத்தான் போதித்தார்கள். ஆனால் அவரவர்களின் காலக்கட்டத்திற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஷரியத்துகளில் சில சலுகைகளை இறைவன் வழங்கியிருந்தான். ஆனால் இந்த மார்க்கச் சட்டங்கள் அனைத்தும் நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஹஜ்ஜத்துல் விதாவின் போது இறங்கிய 5ம் அத்தியாயத்தின் 3ம் வசனம் இறங்கியதோடு முற்றுப்பெற்று விட்டது என்பதை இறைவன் திட்டவட்டமாக அறிவித்து விடுகின்றான்.

எனவேதான் , ''இன்றைய தினத்தில் நபி முஸா(அலை) அவர்கள் இவ்வுலகிற்கு திரும்ப அனுப்பப்பட்டாலும் அவர்களுக்கும் என்னுடைய மார்க்கச் சட்டங்கள் தான் பொருந்தும் என்றும் யுகமுடிவின் வரையில் பரிபூர்ணமாக்கப்பட்டுவிட்ட இந்த மார்க்கத்தில் கூட்டவோ , குறைக்கவோ , மாற்றவோ வேறு எவருக்கும் அதிகாரமில்லை.'' என்றும் அல்லாஹ்வின் திருத்தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

நம்முடைய மார்க்கம் நிறைவுபெற்று விட்டது. ஷரியத்து எனும் மார்க்கச் சட்டங்கள் , மற்றும் பித்அத்து எனும் மார்க்கத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படும் நவீனங்கள் இவை இரண்டுமே மிகவும் தெளிவாக்கப்பட்டுவிட்டன. நம்முடைய மார்க்கச் சட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருத்தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே நிறைவுபெற்றும்விட்டன. இந்த யுக முடிவுவரையில் இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களில் எவ்வித மாற்றத்திற்கும் இடமில்லை என்பதை இறைவனின் இறுதித் தூதர் மிகவும் உறுதியாக அறிவித்து விட்டார்கள். இனி ஷரியத்தையும் பித்அத்தையும் தெளிவாக புரிந்து கொண்ட நிலையில் நம் தலைப்பின் விளக்கவுரைக்குள் செல்வோம்.

நபி(ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறினார்கள் : பிறையைக் காணாதவரை நோன்பு நோற்காதீர்கள் , (மறு) பிறையைக் காணாதவரை நோன்பை விட்டுவிடாதீர்கள். அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் அதனை( அந்த மாதத்தை முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்.

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) : புஹாரி , முஸ்லிம்

இன்றுவரையில் அல்லாஹ்வின் திருத்தூதர் முகம்மது நபி(ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பாக நமக்கு கட்டளையிட்டதன்படியே பிறையை கண்களால் பார்த்தும் , அதனை பார்த்த தகவலின் அடிப்படையிலும் , பிறையைக் காண முடியாத சூழ்நிலையில் அந்த மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தி செய்தும் மாதங்களை கணக்கிட்டு வருகிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த இந்த அற்புதமான வழிமுறையை பின்பற்றுவதில் இன்றைய மக்களிடையே நிலவிவரும் குழப்பத்திற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் காரணம் என்ன? என்பதனையும் நாம்  அறிந்து கொள்ள வேண்டும்.

1.    பிறையைக் காண்பதில் ஏற்படும் குழப்பங்கள் :

நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்த வழிமுறையின்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தின் 29ம் நாள் மாலையில் பிறையைக் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தகவலின் அடிப்படையிலும் அந்தந்த மாதங்கள் தீர்மாணிக்கப்பட வேண்டும்.

ஆனால் இஸ்லாமிய மாதங்களை நிர்ணயிக்க வேண்டிய ஹிலால் கமிட்டிகள் ஏனைய மாதங்களில் அலட்சியமாக இருந்துவிட்டு ரமளான் நெருங்கினால் மட்டுமே மிகுந்த ஆராவாரத்துடன் உயிர்த் தெழுவதும் , அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு பின்னரே பிறை கண்களுக்குத் தெரியும் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்ட காலண்டர்களைப் பின்பற்றி பிறையைக் காண முயல்வதும் நபிவழிக்கு முற்றிலும் முரணானது.

அடுத்ததாக பிறையைப் பார்த்த சாட்சியாங்;களை ஏற்றுக் கொள்வதில் பல்வேறு ஜமாத்துகள் , இயக்கங்கள் , அமைப்புகளின் இடையே ஏற்படும் மோதல்கள். ஒரு கூட்டத்தாரின் சாட்சியங்களை பிறிதொரு கூட்டத்தார் ஏற்றுக் கொள்ள மறுப்பது.

2.    பிறை பார்த்த தகவலை ஏற்றுக் கொள்வதில் ஏற்படும் குழப்பங்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரிய நேரத்தில் கிடைத்த தகவல்களை ஏற்றுக் கொண்டு மாதத்தை கணக்கிட்டுள்ளார்கள். ஆனால் ஒரு மாதம் முப்பது நாட்களாக பூர்த்தியடைந்த பின்னர் கிடைத்த தகவல்களை நபித்தோழர்கள் புறக்கணித்துள்ளார்கள். இந்த அறிவிப்புகள் ஹதீத் கிரந்தங்களில் தெளிவாக பதிவாகியுள்ளன. ஆனால் இந்த அறிவிப்புகளை மார்க்க அறிஞர்கள் தூரத்திற்கு அளவுகோல்களாக எடுத்துக் கொண்டு தகவல்களை ஏற்றுச் செயல்பட தயங்குகின்றனர்.

மேலும் அரேபிய நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய மாதங்களின் அடிப்படையிலேயே தங்களுடைய நாடுகளின் நிர்வாகப் பொருப்புகளைச் செயல்படுத்துகிறார்கள். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில்; அவர்கள் ஒவ்வொரு மாதமும் பிறையைப் பார்த்து அந்தந்த மாதங்களை தீர்மாணித்து செயல்படமுடியாத நிர்பந்த நிலையில் உள்ளனர். எனவே அவர்கள் சந்திரனின் சங்கமத்தின் (CONJUNCTION) அடிப்படையில் மாதங்களைக் கணக்கிட்டு காலண்டர்களைத் தொகுத்து நடைமுறைபடுத்திக் கொண்டுள்ளனர். எனவே அங்கிருந்து செய்யப்படும் அறிவிப்புகளை ஏற்றுக் கொள்வதிலும் பெரும் தயக்கம் நிலவுகிறது.

3.    நபிவழியில் ஒன்றை ஏற்று மற்றொன்றை புறக்கணிக்கும் குற்ற உணர்வு :

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாள் தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) அபூஸயீத்(ரலி):     நூல் : முஸ்லீம்

அரஃபா தினத்தில் எவர் நோன்பிலிருக்கின்றாரோ அவருடைய முன்பின் வருடங்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான்.

அறிவிப்பவர்: அல்கத்தாதா(ரலி): நூல் : முஸ்லீம்

தத்தம் பகுதியில் பிறை பார்தலின் அடிப்படையில் செயல்படும் போது மேற்கண்ட இரண்டு அறிவிப்பு களும் அர்தமற்றதாகிவிடுகிறது. நபிவழியில் ஒன்றை ஏற்று மற்றொன்றை புறக்கணிக்கும் குற்ற உணர்வு ஏற்படுகிறது.

ஹாஜிகள் எந்த தினத்தில் அரஃபாவில் கூடுகின்றனரோ அன்றைய தினமே அரஃபா நாளாகும். எனவே அன்றைய தினத்தில் நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பின்படி உலகின் ஏனையோர் அரஃபா நாளின் நோன்பை நோற்க வேண்டும். அடுத்த நாளாகிய அறுத்துப்பலியிடும் நாள் ஹாஜிகளுக்கு பெருநாள் தினமாக இருப்பதனால் இவ்உலகின் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அந்த நாளையே பெருநாளாக கொண்டாட வேண்டும்.

எவ்வாறு ஒருநாள் கீழ்திசை நாடுகளில் உதயமாகி மேற்கத்திய நாடுகளில் முடிவடைகின்றதோ அவ்வாறே பெருநாட்களும் , அரஃபாவின் தினமும் ஆஸ்திரேலியாவில் உதயமாகி நடுவில் கஃபாவை கடந்து அமெரிக்காவில் முடிவடைய வேண்டும். இதுதான் இன்றைய  நம்பிக்கையாளர் கள் உறுதியாக ஓர் அணியில் ஒன்றினைந்து நபிவழியை நிலைநிருத்த வேண்டிய சரியான வழிமுறை என்பது மற்றொரு வாதம்.  

ஆனால் இன்றைய முஸ்லிம்கள் அவரவர்கள் மார்கச் சட்டங்களை விளங்கிக்கொண்டதற்கேற்ப மூன்று பிரிவினர்களாக பிரிந்து ஒரு கூட்டம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் தாங்களாகவே இயற்றிக் கொண்டுள்ள ஒரு கணினி கணக்கீடு மட்டுமே சரியானது என்று வாதிட்டு அவர்கள் நிர்ணயித்த ஒரு நாளிலும் , நாங்கள் தகவல்களின் அடிப்படையில் செயல்படுகிறோம் என்பவர்கள் மறுநாளிலும் , தத்தம் பகுதியில் மட்டுமே பிறை கண்டதின் அடிப்படையில் செயல்படுவோம் என்பவர்கள் மூன்றாம் நாளிலும் நோன்பு நோற்பதையும் பெருநாட்கள் கொண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.

ஆனால் அல்லாஹ்வின் வேதமாகிய திருமறைக் குர்ஆன் இந்தக் குழப்பங்களுக்கு நேர் எதிர் மாறாக , சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட) கணக்கின்படியே இருக்கின்றன. (5:55) என்றும் இவ்வுலகங்கள் படைக்கப்பட்ட நாளிலிருந்தே அல்லாஹ்வின் பதிவுப்புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டிற்கு பண்ணிரண்டு(9:36) என்றும் அந்த ஆண்டுகளின் எண்ணிக்கையையும் மாதங்களின் கணக்கினையும் சந்திரனுக்கு அவன் நிர்ணயித்துள்ள மனாஸிலின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்(10:5) என்றும் திட்டவட்டமாக அறிவிக்கின்றது.

அல்லாஹ்வின் வேதமாகிய திருமறைக் குர்ஆன் இறைவன் சந்திரனுக்கு மனாஸிலை நிர்ணயித்துவிட்டான் என்றும் அந்த நிர்ணயிக்கப்பட்டுவிட்ட மனாஸிலின் அடிப்படையிலேயே மாதங்களைக் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும் என்றும் கட்டளையிடுகின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் திருநபி(ஸல்) அவர்கள் இதற்கு முற்றிலும் மாறாக தலைப் பிறையைக் கண்களால் கண்டபின்னரே அம்மாதத்தை தீர்மானிக்க வேண்டும் எனக் காட்டித்தருகின்றார்கள்.

அல்லாஹ்வின் வேதம் சந்திரனின் மனாஸிலை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் தலைப் பிறையைக் கண்களால் கண்டபின்னரே மாதத்தை தீர்மானிக்க வேண்டும் எனக் காட்டித்தந்துள்ளார்கள். திருமறைக் குர்ஆனின் தெளிவான வசனங்களும் நபிவழியும் ஒன்றுக்கொன்று முரண்படுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இதற்கான காரணங்களை இன்றைய முஸ்லிம் சமுதாயம் தெளிவாக அறிந்து தங்களுடைய மார்கச் சட்டங்களை முறையாக செயலாற்ற வேண்டும் என்பதே இந்த விளக்கவுரையின் முக்கிய நோக்கம்.     

(நபியே!) அஹில்லாவைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்: நீர் கூறும் : அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பையாகவும் உள்ளன. மேலும் அவ்வீடுகளுக்குள் மேற்புறமாக (அல்லது பின்புறமாக) வருவதில் நன்மை (புண்ணியம்) இல்லை: ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே நன்மை அடைந்தோராவர்: எனவே அவ்வீடுகளுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்: மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.               (2:189)

முதலில் இந்த வசனத்தில் இடம் பெரும் ''அஹில்லா'' என்றால் என்ன? இதைப் பற்றி யார் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள்? இதைப் பற்றி என்ன விளக்கங்களை கேட்டார்கள்? ஏன் கேட்டார்கள்? அஹில்லா எவ்வாறு காலத்தைக் காட்டும்? அது ஹஜ்ஜை எவ்வாறு அறிவிக்கும்? என்பன போன்ற யதார்த்தமான கேள்விகளுக்கு தகுந்த விளக்கங்களை அறிந்து கொள்ள முனைவோம்.

இந்த வசனம் அஹில்லாவைப் பற்றி கேட்பவர்களுக்கு இறைவன் பதிலளிப்பது போல் அமைந்துள்ளது. ''நீர் கூறும்'' என இந்த வசனத்தில் இறைவன் கூறுவதன் மூலம் மக்களுக்கு அதனை விரிவாகவும் தெளிவாகவும் விளக்குமாறும் நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். எனவே நிச்சயமாக இந்த வசனத்திற்கு இறைவனின் திருத் தூதர் நபி(ஸல்) அவர்கள் தெளிவான ஒரு விளக்கத்தையும் தந்திருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் விளக்கத்தை அறிந்து அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முதலில் அத்தியாயம் 10 சூரா யூனுஸின் 5வது வசனத்தின் பொருளாக்கத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அவன்தான் சூரியனை ஒளிவிளக்காகவும் அந்தச் சந்திரனை இலங்கிக் கொண்டிருப்பதாகவும் ஆக்கினான் : மேலும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (ஒவ்வொரு மாதத்தின்) கணக்கினையும் (நீங்கள்) அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே (சந்திரனாகிய) அதற்கு பல மன்ஸில்களையும் நிர்ணயம் செய்துவிட்டான். சத்தியத்துடனேயே (தன்னுடைய திட்டத்தின்படியே) அல்லாது அல்லாஹ் இவற்றை (இவ்வாறு) படைக்கவில்லை: கல்வியறிவுபெற்ற (ஆலிம்கள் , உலமாக்களின்)  சமுதாயத்திற்கு (இறைவனின்) இந்த அத்தாட்சிகளில் தீர்க்கமான விளக்கங்கள் உள்ளன.

(10 : 5)

சந்திரனின் மன்ஸில்கள் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டன மேலும் சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்ற வேதவாக்குகளை உறுதி செய்வதற்கான ஆதாரங்களே சூரிய கிரகணமும் , சந்திர கிரகணமும். எனவே தான் நபி(ஸல்) அவர்கள் கிரகணங்களைக் கண்டதும் அவை இறைவனின் மாபெரும் அத்தாட்சிகள் என்றும் அவை விலகும்வரையில் இறைவனைப் புகழ்ந்து பெருமைப்படுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டு அதற்கான இரண்டு ருக்வுகளைக் கொண்ட நீண்டநேர சிறப்புத் தொழுகையை அந்தக் கிரகண நேரங்களில் எவ்வாறு தொழவேண்டும் என்றும் காட்டித்தந்துள்ளார்கள்.

எப்போது பூமியும் படைக்கப்பட்டு பின்னர் சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரு வரையரைக்குள் இணைக்கப்பட்டதோ அப்போதே சந்திரனுக்கு மனாஸிலும் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. இதன் யதார்தம் இந்த அகிலத்தை படைத்த அன்றே இறைவன் ஒவ்வொரு மாதத்தின் கணக்கினையும் தீர்மாணித்துவிட்டான். இதைத்தான் ,

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டிற்கு) பன்னிரண்டு ஆகும் .....என்று திருமறையில் இறைவன் பதிவு செய்கின்றான்.

நிர்ணயம் செய்யப்பட்டுவிட்ட சந்திரனின் மன்ஸில்களிலிருந்து நீங்கள் ஒவ்வொரு மாதங்களின் கணக்கையும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் அறிந்து கொள்ளலாம் என்றும் மேலும் எவர்கள் இறைவனின் இந்த அத்தாட்சிகளில் அலட்சியமாக இருப்பார்களோ  அவர்கள் தங்களின் இந்த அலட்சியப் போக்கால் தீமைகளையே பெருக்கிக் கொள்வார்கள் (10 : 7 , 8) என்றும் இறைவனின் திருவேதம் தெளிவாக விவரிக்கின்றது.

இந்த வேதவசனங்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்திற்கு முந்திய மக்கா வாழ்கையின் போதே இறங்கிவிடுகின்றது. இறைவனின் திருத் தூதரும் அவர்களுடைய உத்தமத் தோழர்களும் இவ்வளவு தெளிவான வசனங்கள் இறங்கிய பின்னரும் மாதத்தை கணக்கிடும் விஷயத்தில் அலட்சியமாக இருந்திருப்பார்களா? என்றால் அவ்வாறு இருந்திருக்கவே மாட்டார்கள் என உறுதியாக கூறலாம். நிச்சயமாக சந்திரனின் மன்ஸில்களிலிருந்து மாதத்தை எவ்வாறு கணக்கிட வேண்டும்? என்பதற்கான கட்டளையை இறைவனிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் தூதரின் மக்கா வாழ்கையின் கடைசிக்கட்டத்தில் மெஹ்ராஜின் போது கடமையாக்கப்பட்ட 5 நேரத் தொழுகையைத் தவிர மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்துவிட்ட பின்னர் ஹிஜ்ரி 2ம் ஆண்டின் ஸஹ்பான் மாதம் வரையிலும் வேறு எந்தக் கடமையான சட்டங்களையும் நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் கட்டளையிடவில்லை.

இந்தக் காலக்கட்டத்தில் தான் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஹ்பான் மாதத்தின் நடுவில் இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களையும் , விளக்கங்களையும் இறைவன் இறக்கிவைக்கின்றான். இதனையே 2ம் அத்தியாயமான சூரா அல்பக்கராவில் 2ம் பாகமாக வசனம் 142லிருந்து 242வரையில் இறைவன் திருமறையில் பதிவு செய்கின்றான்.

தொழுகையை அடுத்து முதல் சட்டமாக முஸ்லிம்கள் முன்னோக்குவதற்கான கிப்லாவை பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜித் அல் அக்ஸாவிலிருந்து பைத்துல் ஹராம் அமைந்திருக்கும் மக்காவிற்கு மாற்றுமாறு கட்டளையிடுகிறான். பின்னர் வாழ்வியல் சட்ட திட்டங்களை விவரிக்கின்றான். புண்ணியம் என்றால் என்ன? என்று விளக்கமளிக்கின்றான்.

பின்னர் (2:183)ல் நோன்பு விதியாக்கப்படுகின்றது. அந்த நோன்பு ரமளான் மாதத்தில் மட்டுமே விதியாக்கப்பட்டதின் விளக்கங்களை (2:184,185)ம் வசனங்களில் தொடர்ந்து வசனம் (2:189)ல் பிறைகள் பற்றிய விளக்கத்தையும் , சட்டத்தையும் இறைவன் பதிவு செய்கின்றான். தொடர்ந்து (2:190லிருந்து 195வரையில்) அடுத்து வரவிருக்கும் ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் முதல் போரான பத்ரு யுத்தத்திற்கு முன்னராகவே போர் நியதிகளைப் பதிவு செய்கின்றான். (2:196)ல் ஹஜ்ஜை கடமையாக்கி அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளையும் சட்டங்களையும் பதிவு செய்து , பின்னர் மாதவிடாய் - தலாக் போன்றவற்றின் சட்டங்களையும் பதிவு செய்கின்றான். முடிவில் வசனம் (2:242)ல்,

''இவ்வாறு இறைவன் விளக்கும் அந்தச் சட்டதிட்டங்களை மக்கள் தெளிவாக சிந்தித்து அதன்படியே செயலாற்ற வேண்டும்'' என்ற அறிவுரையோடு முடிக்கின்றான்.

இறைவன் எப்போது நோன்பை விதியாக்கினானோ அதைத் தொடர்ந்தே அல்லாஹ்வின் தூதரும் அவர்களுடைய தோழர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்திரனின் மனாஸிலைப் பற்றிய சட்ட விளக்கத்தையும் இறக்கிவிடுகின்றான்.

(நபியே!) அஹில்லாவைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்: நீர் கூறும்: அவை மக்களுக்கு காலம் காட்டுபவையாகவும் ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. மேலும் அவ்வீடுகளுக்குள் மேற்புறமாக (அல்லது பின்புறமாக) வருவதில் நன்னை (புண்ணியம்) இல்லை: ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே நன்மை அடைவோராவர்: எனவே அவ்வீடுகளுக்குள் (முறையான) வாசல்கள் வழியாகவே வாருங்கள்: மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

(2:189)

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டின் ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டுவிட்ட நிலையில் நோன்பின் மாதமான அந்த ரமளானை முறையாகவும் முழுமையாகவும் அடையவேண்டும் என்ற பேராவலில் சந்திரனின் மனாஸிலை கணக்கிடுவதற்கான விளக்கத்தை இறைத் தூதரும் அவருடைய தோழர்களும் இறைவனிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் ''(நபியே!) அஹில்லாவைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்'' என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்திற்கு பதலளிப்பது போல் இந்த வசனம்(2:189) இறங்குகிறது.

மேலும் வசனம் (10:5)ஐ மறுபடியும் ஒருமுறை பாருங்கள்:

மேலும் (நீங்கள் அதிலிருந்து) ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (ஒவ்வொரு மாதத்தின்) கணக்கினையும் அறிந்து கொள்வதற்காகவே (சந்திரனாகிய) அதற்கு மன்ஸில்களை நிர்ணயம் செய்து விட்டான். கல்வியறிவு பெற்ற (உலமாக்களின்) சமுதாயத்திற்கு (இறைவனின்) இந்த அத்தாட்சிகளில் தீர்க்கமான விளக்கங்கள் உள்ளன.

இந்த வசனத்தில் லி கவ்மி யஹ்லமூன் என்று இல்மையுடைய , கல்வியறிவு பெற்ற , ஆலிம்கள் , உலமாக்களின் சமுதாயத்திற்கு என்று இறைவன் மேற்கோள் காட்டுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரபி அகராதியின்படி மார்க்கக் கல்வியினை பயின்றவர்கள் மட்டும் ஆலிம்கள் , உலமாக்கள் அல்ல. மாறாக அறிவியல் கல்வி , உலகக் கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் உலமாக்களே.

எனவேதான் (2:184)ல் ''அய்யாமன் மஹ்துதாத்'' எனக் குறிப்பிட்ட சில நாட்களில் அதாவது (2:185)ன்படி எவர் ரமலான் மாதத்தினை அடைந்துகொள்கிறாரோ அவருக்கு அம்மாதத்தினுடைய நாட்களில் மட்டுமே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்து (2:189)ல் அந்த மாதத்தை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதையும் இறைவன் திருமறையில் பதிவு செய்கிறான். ஆனால் அந்த இறைச்சட்டத்தை அப்படியே செயலாற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலை அன்று இல்லை. அன்று என்று சொல்வதைவிட இன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முந்திய காலக்கட்டங்ளில் கூட அந்தச் சூழ்நிலை ஏற்படவில்லை என்று கூறினாலும் அது மிகையாகாது.

வசனம் (2:189)ல் இடம்பெரும் அஹில்லாவைக் கணக்கிடுவதற்கு அன்றைய காலச் சூழ்நிலையில் எவ்விதத்திலும் சாத்தியமில்லை. மேலும் முஸ்லிம்கள் அன்று மதினாவை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு சிறிய இயக்கமாகத்தான் இருந்தார்கள். மக்காவை ஹிஜ்ரத்து செய்து வந்துவிட்ட முஹாஜிர்களையும் மதினா வாசிகளான அன்சாரித் தோழர்களையும் சேர்த்துக் கணக்கிட்டாலும் ஆயிரத்தைக் கூட தாண்டமாட்டார்கள்.

அது பத்ரு , உஹது யுத்தங்களுக்கு முந்திய காலக்கட்டம். மக்காவின் வெற்றி கூட அதற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிஜ்ரி 8ஆம் ஆண்டுதான் கிடைக்கின்றது. ஹஜ் கடமையாக்கப்பட்டு ஏழு வருடங்களுக்குப் பின்னர் ஹிஜ்ரி 9ஆம் ஆண்டில்தான் அபூபக்ர் (ரழி) அவர்களின் தலைமையில் முதல்முறையாக ஹஜ்ஜை நிறைவேற்ற முஸ்லிம்கள் மக்கா செல்கின்றனர். எனவே மாதங்களைக் கணக்கிட இறைவன் இறக்கிய உலகளாவிய ஒரு மார்க்கச் சட்டத்தை அன்று மதினாவிலும் பின்னர் முஸ்லிம்களின் ஆட்சியின்கீழ் வருகின்ற ஏனைய நாடுகளிலும் நிலைநாட்டுவதற்கு எவ்விதத்திலும் சாத்தியமில்லை.

இந்த மார்க்கச் சட்டத்தை சில காலங்கள் வரையில் முறையாகச் செயல்படுத்த முடியாது என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்த அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்கள்  ''அய்யாமன் மஹ்துதாத்'' என்ற வசனம் (2:184)ன் கட்டளையின்படி நோன்பு குறிப்பிடப்பட்ட சில நாட்களில் அதாவது ரமளானுடைய நாட்களில் மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது என்பதால் அந்த ரமளானுடைய மாதத்தை முடிந்தவரையில் பூர்த்தியாக அடைவதற்கு ஒரு இலகுவான வழிமுறையினைக் காட்டித்தருகின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது தம் கைகளைத் தட்டி மாதம் இப்படித்தான் இப்படித்தான் என்று கூறினார்கள். மூன்றாவது தடவை தமது கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.

எனவே பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு அது மறைக்கப்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) :நூல்: முஸ்லிம்.

இது மாதங்களைக் கணக்கிட இறைவன் காட்டித்தந்துள்ள ஒரு இலகுவான வழிமுறை என்றும் மேலும் இது காலச் சூழ்நிலையின் கட்டாயம் என்பதையும் தெளிவாக விவரிக்கின்றார்கள்.

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். ஆதாவது ஒருதடவை 29 ஆகவும். ஓருதடவை 30 ஆகவும் இருக்கும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி): நூல்கள் : புகாரி , முஸ்லீம் , அஹ்மத்

பிறையைப் பற்றிய வசனம் 10:5ம் , 2:189ம் இறங்கிவிட்ட பின்னரும் கண்களால் பார்த்துத்தான் மாதத்தை கணக்கிடவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் திட்டவட்டமாக அறிவித்து விடுகின்றார்கள். அதாவது இன்னும் சில காலக்கட்டங்கள் வரையில் இந்த மனித சமுதாயம் கல்வியறிவில் தேற்ச்சியடையாத உம்மி சமுதாயமாகத்தான் இருக்கும். எனவே அவர்களால் சில காலங்கள் வரையில் இறைவன் சந்திரனுக்கு நிர்ணயித்திருக்கும் கணக்குகளை துள்ளியமாக கணக்கிடவும் அதனைச் செயலாற்றவும் முடியாது என்பதைத்தான் நபி(ஸல்) அவர்கள் இங்கு சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஆனால் எப்போது இந்த நிலை மாறி இந்த மனித சமுதாயம் ''கவ்மி யஹ்லமூன்'' என்று இறைவன் (10:5)ல் மேற்கோள் காட்டும் கல்வி அறிவுபெற்ற உலமாக்களின் சமுதாயமாக மாறிவிடுகின்றதோ அப்போது (2:189)ல் இறக்கிவைக்கப்பட்ட மார்க்கச் சட்டமும் அப்படியே நிலைநாட்டப் பட்டுவிடவேண்டும் என்பதை;தான் இந்த அறிவிப்பில் வலியுறுத்துகிறார்கள்.

மனித சமுதாயத்திற்கான வழிகாட்டுதல்கள் அனைத்தும் 7ம் நூற்றாண்டில் இறைத் தூதர் திருநபி(ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே இறைவனால் பரிபூரணமாக்கப் பட்டுவிட்டது என்பதை நாம் தெளிவாக அறிந்து வைத்துள்ளோம். ஆனாலும் 16ம் நூற்றாண்டுவரையில் இவ்வுலகின் பெரும்பாலான சமுதாயங்கள் அறிவியல் மற்றும் சமுதாய சீர்திருத்த சிந்தனைகளில் மிகவும் பின்தங்கியே இருந்தனர் என்பதும் உலகறிந்த உண்மையே.

எனவே தான் இந்த இடைப்பட்ட ஆயிரவருட காலக்கட்டத்தை இன்றைய மேற்கத்திய வரலாறு மனித சமுதாயத்தின் இருன்ட காலம் (னுயசம யுபநள in வாந றுழசடன ஊiஎடைளையவழைn) என பதிவு செய்கின்றது. இஸ்லாம் தளைத்தோங்கி ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சுமார் 16ம் நூற்றாண்டில் தான் இன்றைய அறிவியல் (ஆழனநசn ளுஉநைnஉந) இந்த உலக அரங்கில் அடியெடுத்து வைக்கின்றது.

கண்களால் பிறையைக் கண்டு மாதத்தை தீர்மாணிப்பது என்பது ஒரு இலகுவாக்கித் தரப்பட்ட வழிமுறை மேலும் நிச்சயமாக ஒரு காலக்கட்டத்தில் இந்தச் சலுகை முடிந்துவிடும் என்பதற்குரிய அதிகப்படியான ஆதாரங்களையும் அறிந்து கொள்வோம்.

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாள் தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரழி) அபூஸயீத்(ரழி):     நூல் : முஸ்லீம்

அரஃபா தினத்தில் எவர் நோன்பிலிருக்கின்றாரோ அவருடைய முன்பின் வருடங்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான்.

அறிவிப்பவர்: அல்கத்தாதா(ரலி): நூல் : முஸ்லீம்

இந்த இரண்டு அறிவுப்புகளுக்கும் அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் என்ன விளக்கம் தருகிறார்கள் என்பதைக் காண்போம்.

நான் அரபா நாளில் ஆயிஷா(ரழி) அவர்களைக் காணச்சென்றேன். இவருக்கு கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள் ! அதில் இனிப்பை அதிகமாக்குங்கள் என்று ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள். (அரபா நாளாகிய) இன்று நான் நோன்பு நோற்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜூப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரழி) அவர்கள் ஹஜ்ஜூப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜூப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள் என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர் : மஸ்ருக் :  நூல் : பைஹகீ.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை சந்திக்க வந்திருகின்ற இந்த நபர் மக்காவில் ஹாஜிகள் எந்த தினத்தில் அரஃபாவிலிருந்தார்களோ அன்று அரஃபாதினத்தின் நோன்பை நோற்றுவிட்டு மறுநாள் மதினா வாசிகள் அவர்களின் கணக்கின்படி அஃரபா நாளின் நோன்பிலிருக்கும் போது அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை சந்திக்க வருகின்றார். இந்த நிகழ்வை நன்றாக சிந்தித்தால் வந்திருக்கின்ற நபர் நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள நபி(ஸல்) அவர்களின் இரண்டு அறிவிப்புகளுக்கும் விளக்கம் பெறும் நோக்குடனே வந்துள்ளார் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். அவருடைய அச்சத்தை தீர்;க்கும் விதமாக அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் இவருக்கு கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள் ! அதில் இனிப்பை அதிகமாக்குங்கள் என்று கூறுகின்றார்கள்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களும் ஏனைய மதினா வாசிகளும் அன்று அரஃபா நாளின் நோன்பிலிருந்தாலும் அன்னையார் அவர்களை சந்திக்க வந்திருக்கின்ற  அந்த நபர் அன்றைய தினத்தை பெருநாள் தினமாக கருதுவதால் அவருக்கு இனிப்பை அதிகமாக்கி கோதுமை கஞ்சியைக் கொடுங்கள் என்று உத்தரவிடுகின்றார்கள். அந்த நபரின் அச்சத்தில் அதாவது நபி(ஸல்) அவர்களின் அறிவிப்புகள் நிச்சயமாக நிலைநாட்டப்பட வேண்டும் என்ற அவருடைய எண்ணத்தில் எவ்வித தவறுமில்லை என்பதையும் உறுதி செய்கின்றார்கள். அத்துடன் கீழ்கண்ட நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பையும் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாளில் தான் நோன்பு, நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் நோன்புப் பெருநாள். ஹஜ்ஜூப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் ஹஜ்ஜூப் பெருநாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரழி) : நூல் :திர்மிதி

அதாவது இப்போது உங்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்புகளை அஞ்ச வேண்டாம். எப்போது அவற்றை நிலைநாட்டுவதற்கான நேரம் வருமோ அவ்வப்போது அன்றைய காலக்கட்டங்களில் வாழும் மக்களே அதனை முடிவு செய்வார்கள் என்றும் அன்னையார் அவர்கள் விளக்கம் தருகின்றார்கள்.

பிறையைப் பார்த்துதான் மாதத்தை தீர்மானிக்க வேண்டும் என்று மக்களுக்கு கட்டாயமாக்கிய நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளிலேயே அந்தக் கட்டளை ஒரு காலக் கட்டத்தில் மாற்றப்பட்டுவிடும் என்பதனை எடுத்துக்காட்டும் விதமாக மக்களை பாதிக்காத ஒரு சூழ்நிலையில் செயல்படுத்தியும் காட்டுகின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியர்களை விட்டு ஒருமாத காலம் பிரிந்திருப்பேன் என உறுதிசெய்து அவர்களை விட்டும் விலகி இருக்கின்றார்கள். 29 நாட்கள் முடிவடைந்த நிலையில் அவர்களிடம் செல்கின்றார்கள். அப்போது ஒருமாதத்தின் தவணை இன்று முடிவடையவில்லை என நினைவூட்டப்படுகின்றார்கள். அதற்கு நிச்சயமாக மாதம் என்பது 29 நாட்களையுடைய தாகவும் இருக்கும் எனக் கூறினார்கள்.

                              : ஸஹிஹ் முஸ்லிம் , ஸஹிஹ் புகாரி.

இங்கு நபி(ஸல்) அவர்கள் ஒருமாதத்தின் தவணையை உறுதி செய்கின்றார்கள். எனவே நிச்சயமாக அந்த மாதம் அவர்களின் மனைவியர்களிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதமாகிவிடுகின்றது. மிகவும் உன்னிப்போடு அந்த மாதம் கணக்கிடப்படுகின்றது. 29 நாட்கள் முடிவடைந்து பிறையைக் காண முடியாத நிலையில் அந்த மாதம் 30 இரவுகளைக் கொண்டது என மக்கள் முடிவெடுத்து விடுகின்றார்கள். அதனால்தான் 30ம் நாளில் நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் சென்ற போது அந்த மாதம் இன்னும் முடிவடையவில்லை  என நினைவூட்டப்படு கின்றார்கள். அதற்கு நிச்சயமாக மாதம் என்பது 29 நாட்களையுடையதாகவும் இருக்கும் என்று நபி(ஸல்) கூறுகின்றார்கள்.

இங்கு மிகமுக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பிறையைக் காணவும் முடியவில்லை அதைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவுமில்லை. இது நபித்தோழர்கள் அனைவருக்கும் உறுதியாகத் தெரியும். இந்த நிலையில் மறுநாளை யவ்மு ஷக் எனும் அந்த மாதத்தின் சந்தேகத்திற்குரிய 30வது நாளாகத்தான் கணக்கிட வேண்டும் என்று மக்களுக்கு கட்டாயக் கட்டளையிட்டிருந்த நபி(ஸல்) அவர்கள் அதற்குமாறாக அந்த மாதம் 29 நாட்களில் முடிவடைந்துவிட்டது என்று அறிவிக்கின்றார்கள்.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று விஷயங்களை தெளிவாக்குகின்றது. ஒன்று இந்த அகிலத்தை படைத்த அன்றே மாதங்களின் கணக்குகளை அல்லாஹ்; நிர்ணயித்துவிட்டான் என்பதை உறுதி செய்கின்றது. மேலும் மாதங்களைக் கணக்கிட பிறையைக் கண்களால் காணவேண்டிய அவசியம் இல்லை என்பதனையும் மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. மேலும் அந்த மாதம் முடிந்துவிட்டது என்ற அறிவிப்பு இறைவனின் பதிவுப் புத்தகத்திலிருந்து வருவதால் மாதங்கள் முடிவதும் , துவங்குதும் இந்த அகிலமனைத்திற்கும் ஒரே கிழமையிலும் தேதியிலுமே அமையும் என்பதனையும் தெளிவாக்கி வைக்கின்றது.   

சந்திரனின் மனாஸிலுக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்த அன்றைய உம்மி சமுதாயத்திற்கும் அந்த மனாஸிலை தெளிவாக அறிந்து செயலாற்ற சக்தி பெற்றிருக்கின்ற இன்றைய உலமா சமுதாயத்திற்கும் இந்த நிகழ்வை ஒரு முன்மாதிரியாக நபி(ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளிலேயே செயல்படுத்தியும் காட்டிவிட்டார்கள்.

இதுவரையில் இறைவனின் திருத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்திருந்த நடைமுறையில் நிலைத்திருந்தோம். அது ஓர் காலக்கட்டம் வரையில் சலுகையாக்கித் தரப்பட்ட வழிமுறை என்பதனையும் தெளிவாக விளங்கிக் கொண்டோம். இனி திருமறைக் குர்ஆன் நமக்கு என்ன கட்டளையிடுகிறது என்பதனை நாம் அறிந்து கொள்வோம்.

(நபியே!) அஹில்லாவைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்: நீர் கூறும் : அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பையாகவும் உள்ளன. மேலும் அவ்வீடுகளுக்குள் மேற்புறமாக (அல்லது பின்புறமாக) வருவதில் நன்மை (புண்ணியம்) இல்லை: ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரோ நன்மை அடைவோராவர்: எனவே அவ்வீடுகளுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்: மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

(2:189)

நபி(ஸல்) அவர்கள் இந்த வசனம் இறங்கிய பின்னர் மாதத்தை தீர்மாணிக்கும் விஷயத்தில் என்ன முடிவெடுத்தார்கள் ? மக்களுக்கு எவ்வாறு கட்டளையிட்டார்கள் ? என்பதை இதற்கு முன்னர் தெளிவாக விளங்கிக்கொண்டோம். ஆனாலும் இந்த வசனத்திற்கு இதுவரையில் கொடுக்கப்பட்டுவருகின்ற விளக்கம் தவரானது என்பதையும் விளங்கிக்கொள்வோம்.

இந்த வசனத்தில் ஹஜ் என்ற வார்த்தையும் வீடுகளுக்குள் செல்வது என்ற சொற்தொடரும் அடுத்தடுத்து வருவதால் திருமறையின் விரிவுரையாளர்களில் பலர் இந்த வசனத்தின் துவக்கத்தில் இறைவன் மக்களுக்குத் தெளிவாக்க முற்படும் அஹில்லாவின் விளக்கத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்ற, அஞ்ஞான காலத்தில் ஹஜ்ஜிக்கு செல்பவர்களிடம் நிலவி வந்த ஓர் மூட பழக்க வழக்கத்திற்கு இறைவன் தடை விதித்ததுபோல இந்த வசனத்தை விரிவாக்கம் செய்துள்ளனர்.

திருமறையின் சிறந்த விரிவுரையாளர்களில் பலரும் இந்த வசனத்திற்கு பராவு பின் ஆஸிப்(ரழி) அவர்கள் வாயிலாக புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தையே அவர்களுடைய விரிவுரைகளில் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அது ஒரு நபிமொழி அல்ல. பராவு பின் ஆஸிப்(ரழி) அவர்களின் தனிப்பட்ட கருத்துதான்.

இந்த வசனத்தின் முதல் பகுதியை விட்டுவிட்டு அதன் பின்னர் கூறப்படும் விஷயங்களுக்கு மட்டுமே பராவு(ரழி) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இந்த 2ம் அத்தியாயம் முழுவதும் இறங்கியது மதினாவில் தான் மேலும் (2:142)லிருந்து (2:242) வரையிலுள்ள சட்டங்கள் பத்ரு, உஹது வெற்றிக்கு முன் ஒரு சிறிய இஸ்லாமிய இயக்கம் நிறுவப்பட்ட முதல்; கட்டத்தின் போதுதான் அருளப்பட்டது.

ஆனால் அப்போது மக்கா வெற்றி கொள்ளப்படவில்லை. மக்காவின் ஆட்சி அன்று இஸ்லாத்தின் எதிரிகளிடம் தான் இருந்தது. இதனால் மதினா வாசிகளான அன்சாரித் தோழர்களும் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்துவிட்ட முஹாஜிர்களும் உம்ரா - ஹஜ் என நினைத்துக்கூட பார்க்க முடியாதவர்களாய் இருந்தார்கள். இந்த தருணத்தில் அன்சாரிகளிடத்தில் இஹ்ராமின் நிலையில் தங்களுடைய வீடுகளுக்குள் பின்புறமாகச் செல்லும் அஞ்ஞான காலத்து மூட பழக்கவழக்கங்கள் நிலவி வந்தன என்றும் அதற்காகவே இறைவன் இந்த வசனத்தை இறக்கிவைத்தான் என்பதும் எவ்விதத்திலும் பொருத்தமற்றது.

மேலும் (அல்புயூத்) அந்த வீடுகளுக்குள் என்றுதான் வசனம் சுட்டிக் காட்டுகின்றது. அதற்கு (புயூத்திஹும்) அவர்களுடைய வீடுகளுக்குள் என்ற அர்தத்தில் அமைந்துள்ள ஒரு விளக்கத்தை பராவு பின் ஆஸிப்(ரழி) அவர்கள் விளக்கமாக தருகிறார்கள். இந்த விளக்கம் அவருடைய சொந்தக் கருத்துதான் என்பதற்கு இதுவே மிகப்பெரும் ஆதாரமாகும்.

மேலும் வசனம்(2:189)ல் ''நீர் கூறுவீராக'' என்று இறைவன் தன் தூதருக்கு அந்த வசனத்தை மக்களுக்கு விளக்கிவைக்குமாறு கட்டளையிடுகிறான். ஆனால் புஹாரயில் இது பராவு பின் ஆஸிப்(ரழி) அவர்களுடைய கருத்தாகவே பதிவாகியுள்ளது. நபி(ஸல்) அவர்களிடமிருந்து கிடைத்த விளக்கமாக பதிவாகவில்லை. தவரான விளக்கம் கொடுக்கப்பட்டதன் விளைவே இந்த வசனம் இதுவரையில் புரியாத புதிராக இருந்ததற்கு காரணமாகும்.

மேலும் இறைவேதமாகிய திருமறைக் குர்ஆன் காலத்தைவென்ற ஓர் அறிய பொக்கிஷம். இறுதிநாள் வரையிலும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் இறுதிவேதம். அது தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் விளக்கங்களையும் , வழிகாட்டுதல்களையும் அந்தந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார் போலவே வெளிப்படித்திக் கொண்டிருக்கும்.

இதே இரண்டாம் அத்தியாத்தில் வசனம் 196லிருந்து 203 வரையில் ஹஜ்ஜை நிறைவேற்ற நாடுபவர்களுக்கு அதன் வழிமுறைகளையும் அப்போது பேணவேண்டிய ஒழுக்க வரம்புகளையும் தெளிவாகவும் விரிவாகவும் இறைவன் விளக்குகின்றான். மேலும் திருநபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவின் போது ஹஜ்ஜையும் உம்ராவையும் எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதனையும் அதன் கிரியைகளையும் சந்தேகங்களையும் தானே செயலாற்றியும் மக்களுக்கு தெளிவாக்கியும் தருகின்றார்கள்.

அன்று அவர்கள் நிகழ்த்திய உரையில் அஞ்ஞான காலத்து சடங்குகளை தன் காலின் கீழ் நசுக்கிவிட்டேன் என்று பிரகடனமும் செய்கின்றார்கள். எனவே (2:189)ஆம் வசனத்தில் கட்டளையிடப்படும் தடை அஞ்ஞான காலத்திற்குரியதல்ல மாறாக இன்றைய விஞ்ஞான காலத்திற்குரியதே. இதனை இன்ஷா அல்லாஹ் வசனம் (2:189)ன் முறையான பொருளாக்கத்தை அறிந்து கொள்வதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

இந்த வசனத்தை மேலோட்டமாக பார்த்தால் எதுவுமே புரியாதது போல் தான் தோன்றும். ஆனால் இந்த வசனத்தில் இடம் பெறும் சில வார்த்தைகளுக்கு அந்த வசனத்தின் மையக்கருத்திற்கேற்ப முறையான பொருள் தரும் விளக்கங்களை திருமறையிலிருந்தும் இறைதூதரின் அறிவிப்புகளிலிருந்தும் மட்டுமே அறிந்து கொள்வோமேயானால் - இந்த வசனம் தன்னுள் பொதிந்திருக்கும் உண்மையை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். எனவே இந்த வசனத்தை முறையாக விளங்கிக் கொள்வோம்.

முதலில் இந்த வசனத்தில் இடம்பெறும் ''அஹில்லா'' என்ற வார்த்தைக்குரிய முறையான விளக்கத்தை அறிந்து கொள்வோம்.

இன்னும் (காய்ந்து உலர்ந்த) பழைய பேரித்தக் குழையின் தண்டுகளைப் போல் (வளைந்து நெளிந்த தன்னுடைய பாதையில்) மீண்டுக் கொண்டிருக்கும் வரையில் அந்தச் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை நிர்ணயித்துவிட்டோம்.(36:39)

... மேலும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (ஒவ்வொரு மாதத்தின்) கணக்கினையும் அறிந்து கொள்வதற்காகவே (சந்திரனாகிய) அதற்கு மன்ஸில்களையும் நிர்ணயம் செய்து விட்டான்.(10:5)

வசனம் (10:5) , (36:39) ஆகியவற்றில் இறைவன் சந்திரனைப் பற்றிக் கூறும் போது அதற்கு பல மன்ஸில்களை (அல்லது அரபியில் பன்மையில் மனாஸிலை) நிர்ணயித்துவிட்டேன் என்று கூறுகின்றான். எனவே சந்திரனின் அந்த மனாஸிலைப் பற்றி சிறிது விளங்கிக் கொள்வோம்.

பூமி தன்னுடைய அச்சில் தானாகவே சுழன்று கொண்டிருகின்றது. அது தன்னுடைய ஒரு சுழற்ச்சியை முடிப்பதற்கு ஒருநாள் அதாவது 24 மணி நேரங்கள் ஆகின்றன. இந்த பூமியை சந்திரன்; நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றது. தன்னைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரனோடு சேர்ந்து பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றது. பூமி தன்னை சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரனோடு சேர்ந்து சூரியனைச் சுற்றி முடிப்பதற்கு 12 மாதங்கள் அதாவது ஒரு வருடம் ஆகின்றது.

அதாவது பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் ஓர் ஆண்டில் சந்திரன் பூமியை 12 முறைகள் சுற்றிவிடுகின்றது. இதைத்தான் இறைவன் ''இவ்வுலகங்கள் படைக்கப்பட்ட நாளிலிருந்தே அல்லாஹ்வின் பதிவுப்புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டிற்கு பண்ணிரண்டு(9:36)''என்று பதிவு செய்கிறான்.

இன்று நம்மைப் பொருத்தவரையில் இந்த தகவல்கள் மிகவும் சாதாரன விஷயங்களாக இருக்கலாம். ஆனால் 7ம் நூற்றாண்டில் நிலவிவந்த ''நஸிஹா''என்ற வழக்கத்தின்படி சில வருடங்களை 13 மாதங்களாக அரபியர்கள் கணக்கிட்டு வந்தனர். இன்றும்கூட சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் மாதங்களைக் கணக்கிடும் நம் இந்தியத் திருநாட்டில் பருவகாலங்கள் ஆங்கில காலண்டர்களில் வருவதுபோல் ஒவ்வொரு வருடமும் சீறாக அந்தந்த மாதங்களிலேயே திரும்பத் திரும்ப வர வேண்டும் என்பதற்காக சில வருடங்களுக்கு ஒரு முறை ''அதிக்மாஸ்'' எனக்கூறி அந்த வருடத்திற்கு 13 மாதங்களாக கணக்கிட்டுக் கொள்கிறார்கள்.

இவ்வுலகங்கள் படைக்கப்பட்ட நாளிலிருந்தே அல்லாஹ்வின் பதிவுப்புத்தகத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டிற்கு பண்ணிரண்டு(9:36) என்ற வசனம் இறங்குவதற்கு முன்னர் அறியாமைக் காலத்தில் நிலவிவந்த இந்த தவறான வழக்கத்தின் காரணமாக ஹஜ்ஜதுல்விதாவிற்கு முன்னர் சுமார் 33 வருடங்கள் வரையில் அன்றைய மக்கள் தவறான மாதங்களிலேயே ஹஜ்ஜையும் நிறைவேற்றி வந்தார்கள். முஸ்லிம்களின் மீது ஹஜ் கடமையாக்கப்பட்ட பின்னர் நபி(ஸல்) அவர்கள் நிறைவேற்றிய ஹஜ்ஜதுல்விதாவின் போதுதான் சரியான மாதத்தில் ஹஜ் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்புகளில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.     

சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி முடிப்பதற்கு சுமார் 29.5 நாட்கள் ஆகின்றன. சந்திரனின் இந்தத் தவனையை அதன் மாறிமாறி வரும் பல நிலைகளிலருந்து நாம் அறிந்து கொள்கின்றோம். சந்திரனின் மாறிமாறி வரும் பல நிலைகளில் முக்கியமான நான்கு நிலைகளை அதாவது மனாஸிலை இங்கு படமிட்டுக் காட்டியுள்ளோம். அந்த நிலைகளில் சூரியன் , சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் வரிசையில் வருகின்ற முதல் நிலையை சற்று விரிவாக காண்போம்.

அந்த முதல் நிலையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனை நோக்கி இருக்கும் அதன் ஒருபுறம் மட்டும் முழுமையாக ஒளிபெறுகிறது. பூமியை நோக்கி இருக்கும் அதன் மறுபுறம் சூரியனிலிருந்து எந்த ஒளியையும் பெற முடியாததால் முழு இருட்டாகி விடுகின்றது. ஆனாலும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இந்த இருண்ட பகுதியை பின்புறமிருந்து சூழ்ந்து கொள்வதால் பூமியிலிருக்கும் எவராலும் சந்திரனை காணமுடியாத நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு இந்த மூன்று கோள்களும் ஒரு நேர் வரிசையில் அமைகின்ற இந்த நிலையைத் தான்  சங்கமம் (CONJUNCTION) என்று கூறுகிறோம்.

இவ்வாறு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்வரிசையில் சந்திரன் சங்கமித்து மறுநிமிடமே தன் புதுப் பயணத்தை தொடர்கிறது(காண்க படம் 1.). சந்திரனின் இந்தப் பயனத்தின் போதுதான் முதலில் சில நாட்களுக்கு அது பிறைகளாக காட்சியளிக்கின்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் அது வளர்ந்துகொண்டு சென்று அடுத்த நிலையை அடைகின்றது. சந்திரன் பிறைகளாக காட்சிதரும் அந்த முதல் நிலைகளையே (மன்ஸில்களையே) பிறைகள் தோன்றும் மனாஸில் அல்லது “PHASES OF THE NEW MOON”  என்று அழைக்கிறோம்.

சங்கமத்திற்குப் பின் புதுப்பிறை முதன் முதலாக எங்கு தென்படும் ? எப்போது தென்படும் ? என்று எவராலும் துள்ளியமாக அறிவிக்க முடியாது. ஆனால் அஹில்லா என்ற பிறைகள் தோன்றும் மனாஸில் எப்போது துவங்கும் என்பதைத் துள்ளியமாக கணக்கிட்டுவைத்துள்ளோம். சூரிய கிரகணத்தின் போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரு நேர்வரிசையில் சந்திரன் சங்கமித்து பின்னர் அது தன் புதுச்சுற்றை துவங்குவதை நாம் ஆதாரபூர்வமாக நம் கண்களால் காண்கின்றோம். அதனைப் பல 100வருடங்களுக்கு நாம் துள்ளியமாக கணக்கிட்டும் வைத்துள்ளோம்.

எனவே அஹில்லா (பிறைகள்) என்று (2:189)ல் இறைவன் ஹிலாலை (பிறையை) பன்மையில் கூறுவது சந்திரன் சங்கமித்து உடனே தன்னுடைய புதுச்சுற்றை துவங்கி முதலில் சில நாட்களுக்கு பிறைகளாக காட்சிதரும் அந்த முதல் மனாஸிலையே. எனவே அஹில்லா என்பதற்கு 'பிறைகள்(தோன்றும் மனாஸில்)' – (Phயளநள ழக வாந)  நேற ஆழழn என்று பொருளாக்கம் செய்வதே அறிவுப்பூர்வமானதாகும்.

இரண்டாவதாக மவாகீத் என்ற வார்த்தை. இதற்கு நேரடியான பொருள் 'முடிவு' – DEADLINE என்பதாகும். அஹில்லா என்ற பிறைகள் தோன்றும் மனாஸில் ஒவ்வொரு மாதத் தவணையிலும் திரும்பத் திரும்ப தொடர்ந்து வருகின்ற ஒரு நிலை என்பதால் இந்த வசனத்தில் இடம் பெரும் மவாகீத் என்ற வார்த்தையை '(ஒவ்வொரு மாதத்தின்) முடிவையும்' என்று பொருளாக்கம் செய்வதே முறையான பொருளாக்கமாகும்.

மூன்றாவதாக இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடும் ஹஜ் : இது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்காவை நோக்கி வருகின்ற முஸ்லிம்கள் அரஃபா என்ற ஓர் திறந்த வெளியில் துல்ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாள் ஒன்றுகூடி நிறைவேற்ற வேண்டிய ஒரு உலகளாவிய வணக்க வழிபாடு.

இதைத்தான் திருநபி(ஸல்) : (அல் ஹஜ்ஜூ அரஃபத்து) அரஃபா என்ற திறந்தவெளி மைதானத்தில் ஒன்று கூடுவதே ஹஜ் என்றும்: பத்தாம் நாள் சுப்ஹூவுக்குமுன் யார் அரஃபாவை அடைந்துவிட்டாரோ அவர் ஹஜ்ஜை அடைந்து விட்டார் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் இப்னி யஃமர்(ரலி) : நூல் : திர்மதி , நஸயீ

மேலே நாம் எடுத்துக் கொண்டுள்ள திருநபி(ஸல்) அவர்களின் அறிவிப்பைப் பாருங்கள். துல்ஹஜ் 9ம் நாளில் அரஃபா என்ற திறந்தவெளி மைதானத்தில் ஒன்று கூடுவதையே ஹஜ் என அறிவிக்கின்றார்கள். எனவே இந்த அறிவிப்பின்படி ஹஜ் என்பது குறிப்பிடப்பட்ட ஒரு நாளில் நிறைவேற்ற வேண்டிய ஒரு செயல் என்று பொருள் கொள்வதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. எனவே இந்த வசனத்தில் இடம் பெரும் ஹஜ்ஜையும் காட்டுகிறது என்பதனை ஹஜ்ஜை (நிறைவேற்ற மக்கள் ஒன்றுகூடும் அரஃபா நாளை)யும் காட்டுகிறது என விரிவாக்கம் செய்வதால் எவ்வித முரண்பாட்டிற்கும் இடமில்லை.

நான்காவதாக இந்த வசனத்தி;ல் இடம் பெரும்; அல்புயூத் (அந்த வீடுகள்) என்பதற்குரிய முறையான விளக்கத்தை அறிந்து கொள்வது. புயூத் என்பதற்கு அரபி அகராதிகளின்படி (STAGES , MANSIONS , PHASES) நிலைகள், மனாஸில் என்றும் பொருளாக்கம் கொள்ளலாம். இந்த வசனம் 'அஹில்லா' என்ற சந்திரனின் ஒருநிலைய விளக்க முற்படுவதாலும், மேலும் இறைவன் சந்திரனைப்பற்றிக் கூறும் போது (10:5), (36:39) போன்ற வசனங்களில் அதன் மனாஸிலை மட்டுமே சுட்டிக்காட்டுவதாலும் இந்த வசனத்தில் இடம்பெரும் (அல்புயூத்) அந்த வீடுகள் என்பதற்கு இந்த வசனத்தின் கண்ணோட்டத்தில் (சந்திரனின்) அம்மனாஸில் என பொருள் கொள்வதே முறையானதாகும்.

இப்போது வசனம் (2:189)தினை மறுபடியும் காண்போம்.


(நபியே) அஹில்லாவைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்: நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. மேலும் அவ்வீடுகளுக்குள் மேற்புறமாக (அல்லது பின்புறமாக) வருவதில் நன்மை(புண்ணியம்) இல்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே நன்மை அடைவோராவார். எனவே அவ்வீடுகளுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்: மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

இனி இந்த வசனத்திற்குரிய முறையான பொருள்தரும் விரிவாக்கத்தை காண்போம்.

(நபியே!) பிறைகள்(தோன்றும் மனாஸிலைப்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் : அவை மக்களுக்கு (ஒவ்வொரு மாதத்தின்) முடிவையும், ஹஜ்ஜை (நிறைவேற்ற மக்கள் ஒன்றுகூடும் அரபாவின் தினத்தை)யும் அறிவிப்பவையாகும். மேலும் (பிறைகள் தோன்றும்) அம் மனாஸிலுக்குள் மேற்புறமாகவோ (அல்லது பின்புறமாகவோ) வருவதில் நன்மை (புண்ணியம்) இல்லை: ஆனால் இறைவனை மிகவும் அஞ்சி (அவன் கட்டளையின்படியே) செயலாற்றுபவரே நன்மை அடைந்தோராவர். எனவே (பிறைகள் தோன்றும்) அம் மனாஸிலுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்: மேலும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை (அவன் விதியாக்கியுள்ள கட்டளைகளை நிறைவேற்றும் விஷயத்தில்) அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

இனி இந்த வசனத்திற்குரிய விரிவான விளக்கத்தை காண்போம்.

(நபியே!) பிறைகள்(தோன்றும் மனாஸிலைப்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் : அவை மக்களுக்கு (ஒவ்வொரு மாதத்தின்) முடிவையும், ஹஜ்ஜை (நிறைவேற்ற மக்கள் ஒன்றுகூடும் அரஃபாவின் தினத்தை)யும் அறிவிப்பவையாகும்.  

அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் (phases of the new moon)  மக்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முடிவையும் அதாவது அந்த மாதம் 29 நாட்களில் முடிவடைகிறதா அல்லது 30 நாட்களில் முடிவடைகிறதா என்ற அந்த மாதத்தின் தவனையையும் காட்டுகின்றது. மேலும் இவ்வுலகம் அனைத்தும் ஒன்றினைந்து அல்லாஹ்வை வணங்கும் ஒரே நாளாகிய யவ்முல் அரஃபா என்றழைக்கப்படும் ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கள் ஒன்றுகூடும் அரஃபாவின் தினத்தையும் காட்டுகின்றது.

ஒவ்வொரு மாதத்தின் தவணையையும் , உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறிப்பிடப்பட்ட நாளையும் அஹில்லா காட்டித்தரும் என்றால் அந்த மாதங்களின் குறிப்புகளை அதாவது மாதங்கள் துவங்குவதையும் அவை முடிவதையும் மேலும் அந்த மாதங்களில் அமையும் மிக முக்கியமான நாட்களையும் நிச்சயமாக அட்டவனை படுத்திவிடலாம். இதன் யதார்தம், அஹில்லாவின் அடிப்படையில் மட்டுமே இந்த அகிலத்தின் நாட்காட்டி ( An Universal Calendar )அமைய வேண்டும் என்பதனை இந்த வசனம் (2:189) தெளிவாக எடுத்துரைக்கின்றது.

'மேலும் (பிறைகள் தோன்றும்) அம்மனாஸிலுக்குள் மேற்புறமாகவோ (அல்லது பின்புறமாகவோ) வருவதில் நன்மை (புண்ணியம்) இல்லை.'

இறைவனின் இந்த வேதவாக்கு நாம் இதுவரையில் நிலைத்திருந்த நம்முடைய நிலையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள அங்கிகாரம் வழங்குகின்றது. மாதங்களை கணக்கிட கண்களால் பிறையைக் காண வேண்டும் என்பது ஒரு கட்டாய நிபந்தனையல்ல என்பதைத் தெளிவாக்குகின்றது.

அதாவது இன்றுவரை நபி(ஸல்) அவர்களின் கட்டளையின்படியே நாம் புதுப்பிறையைக் கண்களால் பார்த்து அதன்படியே மாதங்களை கணக்கிட்டு வந்தோம். உலகின் கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் இடையில் ஏதாவது ஒருசில பகுதிகளில் தான் அந்தப் புதுப்பிறை தென்படும். அவ்வாறு தென்படும் அப்புதுப் பிறையை கண்களால் பார்த்துத்தான் அந்த மாதத்தினை துவங்க வேண்டுமானால் அப்பிறை முதலில் எங்கு தென்படுகின்றதோ அங்கிருந்து மட்டுமே அம்மாதத்தை முதலில் துவங்க முடியும்.

இப்படித்தான் செயல்பட வேண்டும் என்பதற்கு அதில் எவ்வித நன்மையோ, புண்ணியமோ உங்களுக்கு இல்லை என்றும் மாறாக கண்களால் பிறையைப் பார்த்து அந்தப் பிறைகள் தோன்றும் மனாஸிலுக்குள் செல்வது மக்களுக்கு சலுகையாக்கித் தரப்பட்ட ஒரு தற்காலிகச் சட்டமே அன்றி அதில் நிலைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் எதுவும் இல்லை என்பதையும் இந்த வசனம் தெளிவாக்குகின்றது.

பிறை விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்த வழிமுறைகள் செயல்முறைக்கு மிகவும் இலகுவானதுதான் என்றாலும் அதற்கு வரையறைகள் உள்ளன. அதனடிப்படையில் முற்கூட்டியே மாதங்களை தீர்மானிக்க முடியாது. முழுமையான ஒரு கிழமையில் ஒரு தேதியில் மாதங்களைத் துவங்கவும் முடியாது. எனவேதான் இதுவரையில் நிலைத்திருந்த அந்த சலுகையான தற்காலிகச் சட்டத்தில் மேலும் நீடிப்பதால் எவ்வித நன்மையோ, புண்ணியமோ உங்களை வந்தடைந்துவிடுவதில்லை என்று இறைவன் இங்கு தெளிவாக்கிவிட்டு அடுத்தகட்டமாக நன்மை, புண்ணியம் என்றால் என்ன? என்பதனையும் விளக்குகின்றான்.

'ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே நன்மை அடைவோராவர்.'

இங்கு, இறைவனை மிகவும் அஞ்சி அவனது திருப் பொருத்தத்தை மட்டுமே நாடியவர்களாக அவனது கட்டளைகளுக்கு இணங்கி தன்னுடைய செயல்களை மாற்றிக் கொள்பவர்களே நற்செயல் புரிந்தவர்கள் என்றும் அவர்களே இறைவனிடத்திலிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் என்றும் விவரிக்கின்றான்.

மேலும் இதுவரையில் இறைவனின் திருத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித்தந்திருந்த எளிமையான வழிமுறையை கடைபிடித்து வந்தோம். இறைவன் நமக்கு சூரியனையும் சந்திரனையும் இரவையும் பகலையும் வசப்படுத்தித் தந்துள்ளான் என்னும் வேதவாக்குகளை மெய்ப்பிக்கும் விதமாக அறிவியலின் அடிப்படையில் இன்று நாம் அறிந்து கொண்டுள்ள கணக்கீட்டை இறைவனின் கட்டளையின்படியே இனி நாம் அமல்படுத்தப் போகின்றோம். (இன்ஷா அல்லாஹ்)

'எனவே (பிறைகள் தோன்றும்) அம் மனாஸிலுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்:'

இங்கு (பிறைகள் தோன்றும்) அம்மனாஸிலுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள் என்று அல்லாஹ் ஒரு சட்டத்தை விதியாக்குகின்றான். எனவே முதலில் இறைவன் இங்கு விதியாக்கும் மார்கச் சட்டத்தையும் (ஷரியத்தையும்) அதனை எவ்வாறு நிலைநாட்ட வேண்டும் என்பதைப் பற்றயும் விளங்கிக் கொள்வோம்.

அஹில்லா ஒவ்வொரு மாதத்தின் தவனையையும் அல்லது முடிவையும்; அந்த மாதத்தின் குறிப்பிடப்பட்ட நாளையும் காட்டித்தரும் என்பதை (2:189)ன் முதல் பகுதி தெளிவாக்குகிறது. மேலும் ஒரு மாதத்தின் தவனை 29 அல்லது 30நாட்கள் என்பது நபிமொழி. எனவே ஒரு மாதத்தின் ஓர் அங்கமான ஒரு நாளைப்பற்றி சிறிது விளங்கிக்கொள்வோம்.

உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையை எடுத்துக் கொள்வோம். இந்த வெள்ளிக்கிழமை முதன் முதலாக உலகின் கீழ்த்திசை நாடுகளில் உதயமாகுகின்றது. அந்த நாடுகளில் முதன் முதலாக ஜும்ஆ தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. பின்னர் அந்த வெள்ளிக்கிழமை படிப்படியாக மேல்திசையை நோக்கிச் செல்கின்றது. நடுவில் உம்முல் குரா என்றழைக்கப்படும் நகரங்களின் தாயாகிய மக்காவில் ஜும்ஆ தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. கடைசியாக மேல்திசை நாடுகளில் ஜும்ஆ தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. அங்கேயே அந்தக் கிழமையும் முடிவடைகின்றது.

ஒரு கிழமையானது எவ்வாறு கீழ்திசையில் தோன்றி மேல்திசையில் முழுமையடைகின்றதோ அவ்வாறே ஒரு மாதத்தின் முதல் நாளும் ஏனைய நாட்களும் உலகின் கீழ்திசையிலிருந்தே உதயமாகி நடுவிலிருக்கும் கஃபாவை முன்னோக்கிவரவேண்டும். இதைத்தான் இறைவன் இங்கு முறையாக வாசல்கள் வழியாகவே வாருங்கள் எனக் கட்டளையிடுகின்றான். பின்னர் கஃபாவைக் கடந்து மேல்திசையில் ஒரு முழுமையான நாளாக முடிவடைய வேண்டும்.

கண்களுக்கு பிறை(ஹிலால்) தென்பட்டுவிட்டால் அந்த இடத்தில் அன்றோடு அம்மாதத்தை முடித்து விடுகின்றறோம். ஆனால் அஹில்லா என்ற பிறைகள் தோன்றும் மனாஸில் துவங்கி விட்டால் அப்போது உடனே பிறை உருவாகிவிடுவதில்லை என்றாலும் திட்டவட்டமாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அந்தச் சுற்று முடிவடைந்துவிட்டது என்பதை அது துள்ளியமாகக் காட்டி விடுகின்றது.

எனவே மாதத்தின் முடிவைக்காட்டும் அஹில்லா என்ற பிறைகள் தோன்றும் மனாஸில் துவங்கி விட்டால் ஒருநாள் முதன்முதலாக உதயமாகும் அந்தக் கீழ்திசையிலேயே அந்த மாதத்தின் கடைசிநாளையும் முடிக்க வேண்டும். அப்போதுதான் அம் மனாஸிலுக்குள் முiறாயக வாசல்கள் வழியாகவே வாருங்கள் எனும் இறைவனின் கட்டளைக்கேற்ப அடுத்த மாதத்தின் முதல்நாளை முறையாக கீழ்திசையிலிருந்து ஒரு முழுமையான நாளில் துவங்க முடியும்.

'எனவே (பிறைகள் தோன்றும்) அம் மனாஸிலுக்குள் (முறையாக) வாசல்கள் வழியாகவே வாருங்கள்:'

எனும் இறைவனின் கட்டளையின்படி ஒருமாதத்தின் முடிவைக் காட்டும் அஹில்லா ஏற்பட்டுவிட்டால் அந்த மாதத்தை ஒரு நாள் உதயமாகும் கீழ்திசையில் முடிக்க வேண்டும். அங்கிருந்தே மறுநாளின் வைகறையிலிருந்து புதிய மாதத்தை துவங்க வேண்டும்.

'மேலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு.'

இறைவன் தடுத்தவற்றை விட்டும் நிச்சயமாக நாம் விலகிக் கொள்ள வேண்டும். அவன் ஏவியவற்றை அப்படியே செயல்படுத்த வேண்டும். இதுவல்லாது மனமுரண்டாகவோ அல்லது போதுமான ஞானமின்றியோ இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்பவர்கள் அவனுடைய தண்டனையை அஞ்சிக் கொள்ளட்டும் என அறிவுறுத்தி, இறைவனுக்கு அஞ்சி அவனுடைய கட்டளையின்படியே செயலாற்றுங்கள், உங்களுக்கு வெற்றி நிச்சயம் என வாக்குறுதியளித்து இறைவன் இந்த (2:189)ஆம் வசனத்தை முடிக்கின்றான்.

திருமறையின் மேலும் எட்டு வசனங்களும் இதேமாதிரியான வலியுறுத்தலைக் கொண்டே முடிவடைவதையும் காணலாம். அந்த வசனங்கள் அனைத்தும் இறைவன் விதியாக்கும் ஷரியத்துகளை உள்ளடக்கியதாகவும் மக்களை இறைவனின்புறத்தில் நெருங்கவைக்கும் உறுதி வாய்ந்த அறிவுரைகளாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்;.

(3:130) வட்டியைத் தடைசெய்கிறது. (3:200) நம்பிக்கையாளர்கள் பொறுமையை மேற்கொள்ள வேண்டும் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. (5:35) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை அஞ்சி அவன்பால் நெருங்கும் வழிகளில் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. (5:90) நம்பிக்கையாளர்களுக்கு மது , சூது , சிலை வணக்கம் , குறிபார்த்தல் ஆகியவற்றை தடை செய்கிறது. (5:100) உலமாக்களே ! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என எச்சரிக்கின்றது. (7:69) அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவுகூர்ந்துக்கொள்ளத் தூண்டுகிறது. (8:45),(62:10) ஆகிய வசனங்கள் கடினமான சூழ்நிலையிலும் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை மட்டுமே அதிகமதிகமாக நினைகூர்ந்துகொள்ளவேண்டும் அதுவே அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என நம்பிக்கையளிக்கின்றது.

வசனம் (2:189)யும் சேர்த்து இந்த ஒன்பது வசனங்களும் அந்த வசனங்களில் குறிப்பிடப்படும் இறைகட்டளைகளை இறையட்சத்தோடு நிலைநாட்ட முனையும்போது மட்டுமே நம்பிக்கையாளர் களுக்கு வெற்றி நிச்சயம் என உறுதிவழங்குகிறது. எனவே வசனம் (2:189)ல் இறைவன் விதியாக்கியுள்ள ஷரியத்தினை உடனடியாக நிலைநாட்ட வேண்டியது இன்றைய நம்பிக்கையாளர் களின் கட்டாயக் கடமையாகும்.

PART II

''பிறைகள் தோன்றும் அம்மனாஸிலுக்குள் முறையாக வாசல்கள் வழியாகவே வாருங்கள்'' என்று அல்லாஹ் விதியாக்கும் இந்த மார்கச் சட்டத்தை (ஷரியத்தை) கஃபாவை மையமாக்கியே நிறைவேற்ற வேண்டும். அதாவது அஹில்லா என்ற பிறைகள் தோன்றும் அம்மனாஸில் துவங்கி விட்டால் அந்த மாதத்திற்குள் ஒருநாள் உதயமாகும் கீழ் திசையிலிருந்து கஃபாவை முன்னோக்கி வருபவர்களாக அந்த மாதத்தினுள் நுழைய வேண்டும். அதன் செயல்முறையை இப்போது விளங்கிக் கொள்வோம்.

இறைவன் திட்டவட்டமாக தீர்மாணித்து தந்துள்ள மனித சமுதாயத்தின் கிப்லாவாகிய கஃபாவை மையமாகவைத்தே நாம் ஒருநாளைத் துவங்க வேண்டும் (விரிவான விளக்கத்தை '' கஃபா ஓர் இறைஅத்தாட்சி '' என்ற விளக்கவுரையில் காணலாம்). அந்த அடிப்படையில் ஒருநாளின் உதயம் மக்காவின்  நேரமாகிய UMMALQURA MAKKAH TIME (UMT)யின் படியே தீர்மாணிக்கப்பட வேண்டும். அது எவ்வாறு சாத்தியம் என்பதையும் காண்போம்.

பூமியின் ஒருபாகம் இரவிலிருந்தால் அதன் மறுபாகம் பகலில் இருக்கும்(படம் 2). உலகின் ஒரு எல்கையில் சூரியன் மறைகிறது என்றால், அதன் மறுஎல்கையில் சூரியன் உதித்துக் கொண்டிருக்க வேண்டும். எனவே மக்காவில் சூரியன் மறையும் நேரத்தில், உலகின் மறு எல்கையில் சூரியன் உதித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு நாளும் மக்காவில் சூரியன் அஸ்தமிக்கும் அந்த நேரத்தில் அதன் எதிர் முனையில் மறுநாள் உதயமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இறைவன் விதித்துள்ள வரையறைகள்.  

மேலும் சர்வதேசத் தேதிக்கோடு (INTERNATIONAL DATE LINE)  என்பது கீழ்திசையில் மனிதனால் யூகிக்கப்பட்டுள்ள ஒரு அடையாளக் குறியீடுதான். ஆனால் ரப்பில் ஆலமீன் கஃபாவை மட்டுமே இவ்வுலகின் கிப்லாவாக நிர்ணயித்துத் தருகின்றான். எனவே ஒரு புதிய நாளின் உதயத்தை திருமறையின் வழிகாட்டுதலின்படி மக்காவில் சூரியன் மறையும் நேரத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்மாணிப்பதுதான் அறிவுப்பூர்வமான முடிவாகும்.

மேலும் மக்காவினுடைய ஒவ்வொறு மாதத்தின் 29ஆம் நாளிலோ அல்லது அந்தநாள் முடிவடைந்த நிலையிலோ  மக்காவின் நேரமாகிய ருஆவுயின்படி சூரியன் , சந்திரன் , பூமி ஆகிய மூன்றும் சங்கமிக்கின்றன. அடுத்த நிமிடமே அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸிலும் தொடங்கிவிடுகின்றது.

எனவே ''பிறைகள் தோன்றும் அம்மனாஸிலுக்குள் முறையாக வாசல்கள் வழியாகவே வாருங்கள்'' என்று அல்லாஹ் விதியாக்கும் இந்த மார்கச் சட்டத்தை (ஷரியத்தை) மக்காவை மட்டுமே மையமாக வைத்துச் செயலாற்றப்போகிறோம். இதற்கான இரண்டு அடிப்படை வரையறைகளையும் நாம் அறிந்துகொண்டுள்ளோம்.

1.    ஒவ்வொரு நாளும் மக்காவில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தின் போது கீழ்திசையில் மறுநாள் உதயமாகிக் கொண்டிருக்கும்.

2.    ஒவ்வொறு மாதத்தின் 29ஆம் நாளிலோ அல்லது அந்த 29ஆம்நாள் மக்காவில் முடிவடைந்த நிலையிலோ மக்காவின் நேரமாகிய ருஆவுயின்படி அந்த மாதத்தின் முடிவைக் காட்டும் அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸிலும் தொடங்கிவிடுகின்றது.

அல்லாஹ் நிர்ணயித்துள்ள இந்த இரண்டு வரையறைகளின்படி அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் ஒவ்வொறு மாதத்தின் 29ஆம் நாளிலும் மக்காவில் சூரியன் மறைவதற்கு முன்னர் தொடங்கிவிடுமானால் அந்த மாதம் அந்த 29ஆம் நாளில் முடிவடைந்து விடுகின்றது. எனவே மறுநாளை முறையாக வைகறையிலிருந்து மாதத்தின் முதல்நாளாக கீழ்திசையிலிருந்து துவங்கிவிடலாம். இதைத் தான் அல்லாஹ்வின் திருத்தூதர் திருநபி(ஸல்) அவர்கள் ''மாதம் என்பது 29நாட்களாக இருக்கும் எனக் கூறினார்கள்.''

ஆனால் அந்த மாதத்தின் 29ஆம் நாளில் மக்காவில் சூரியன் மறைவதற்கு முன்னர்வரை அஹில்லா ஏற்படவில்லையானால் மக்காவின் மறுமுணையில் 30ஆம் நாள் துவங்கிவிடுகின்றது. இந்த நாளை அல்லாஹ்வின் திருத்தூதர் திருநபி(ஸல்) அவர்கள் யவ்மு ஷக் அதாவது சந்தேகத்திற்குரிய 30ஆம் நாள் என அழைக்கின்றார்கள். எனவே அந்த மாதத்தை 30 நாட்களைக் கொண்டதாகவே கணக்கிட வேண்டும்.

அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் மக்காவில் சூரியன் மறைவதற்கு முன்னர் அதாவது 29ஆம் நாள் மஃரிபு நேரத்திற்கு முன்னர் தொடங்கிவிடுமானால் அந்த மாதத்தின் பிறை உலகின் மேல்திசையில் உள்ளது என்பதை அறிவியல் ஆதாரபூர்வமாக உறுதி செய்யலாம் , தொலைநோக்கியின் உதவியுடன் காணலாம். சில சந்தர்பங்களில் நம் கண்களால் காண்பதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் 29ஆம் நாள் மக்காவில் சூரியன் மறைவதற்கு முன்னர்வரை அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் ஏற்படவில்லையானால் அந்த மாதத்தின் 29ஆம் நாளில் உலகின் எப்பகுதியாயினும் அங்கு பிறை பிறந்துவிட்டது என உறுதி செய்ய முடியாது. எனவே அந்த மாதத்தின் பிறையை 30ஆம் நாளில் மட்டுமே உறுதிசெய்ய முடியும்.


1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் திருநபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்து நமக்குக் காட்டித் தந்த வழிமுறைகள் எவ்வித குறைபாடுகளும் இல்லாத அசைக்க முடியாத அறிவியல் உண்மை என்பதை வசனம் (2:189) உறுதி செய்கிறது.


ஜஅலல்லாஹுல் அஹில்லத்த மவாகீத்த லின்னாஸி ஃப ஸூமு லிருய்யத்திஹி , வஅப்திரு லிருய்யத்திஹி ஃப'யின் கும்ம அலைக்கும் ஃப உத்து ஸலாஸீன யவ்மன்.

அபு ஹூரைரா : புஹாரி  

மனிதர்களுக்கு மாதத்தின் தவனையை அல்லது முடிவைக் காட்டவே அஹில்லா என்ற  (பிறைகள் தோன்றும்) மனாஸிலை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். (ஆனால் நாம் எழுதவும் , எண்ணவும் தெரியாத உம்மி சமுதாயத்தினராக உள்ளோம் அதாவது மனாஸிலை கணக்கிட்டுக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை.) எனவே (அஹில்லா என்ற அந்த பிறைகள் தோன்றும் மனாஸிலில் பிறை) தென்பட்டதிலிருந்து நோன்பு வைத்துக் கொள்ளுங்கள் : (மறுபடியும் அந்த மனாஸிலில் பிறை) தென்பட்டதும் நோன்பை முடித்துக் கொள்ளுங்கள் : உங்களுக்கு தென்படுவதை விட்டும் (அப்பிறை) மறைந்திருந்தால் மாதத்தை 30 நாட்களாக பூர்த்திசெய்து கொள்ளுங்கள்.

மக்காவை மையமாக வைத்து அஹில்லாவின் அடிப்படையில் 29ஆம் நாளில் மாதத்தை முடிக்கும் நாம் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி அந்த 29ஆம் நாளில் புதுப்பிறை பிறந்துவிட்டது என்பதை ஆதாரபூர்வமாக உறுதி செய்யவும் முடிகிறது. அதுபோலவே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் யவ்மு ஷக் எனும் சந்தேகத்திற்குறிய 30ஆம் நாளையும் அஹில்லாவின் அடிப்படையில் தெளிவாக அறிந்து அதன்படி செயல்படவும் முடிகிறது.

''மாதம் என்பது சிலமுறை 29 நாட்களாகவும் சிலமுறை 30 நாட்களாகவும் இருக்கும்'' என்ற நபி(ஸல்) அவர்களின் முன்அறிவிப்பு இன்றைய அறிவியல் உண்மை என்று நிருபனமாகிவிட்டது. வசனம் 2:189 இன் வேதவாக்கின்படி அஹில்லா எனும் பிறைகள் தோன்றும் மனாஸில் ஒவ்வொரு மாதத்தின் முடிவையும் அதாவது அந்த மாதம் 29 நாட்களில் முடிகிறதா? அல்லது 30 நாட்களில் முடிகிறதா? என்ற அந்த மாதத்தின் தவனையையும் துள்ளியமாக காட்டித்தருகின்றது.  

அல்லாஹ்வின் வேதம் கட்டளையிடும் இந்த ஷரியத்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்த வழிமுறைக்கு எவ்விதத்திலும் முரணானது அல்ல. அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்கள் இறைவேதத்திற்கு முற்றிலும் இசைவானது என்பதையே இது உறுதிசெய்கின்றது. அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு மாதத்தையும் அந்தந்த மாதங்களின் பிறையைக் கண்களால் கண்ட பின்னரே துவங்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் வேதமாகிய திருக்குர்ஆன் அந்த மாதங்களை அஹில்லாவின் அடிப்படையில் முற்கூட்டியே தீர்மாணித்துக்கொள்ள வழிவகுத்துத் தருகின்றது. 

சில உதாரணங்களை இங்கு விளங்கிக் கொள்வோம். :

Phases of the New Moon in Universal Time (UTC) Ahillath : Before Sunset of 29th day in Makkah (in UMT=UT+3hr) (Month ends in 29 days) Ahillath : After Sunset of 29th day in Makkah (in UMT=UT+3hr) (Month ends in 30 days) First Day of New Month begins on Islamic Month of Hijri Year 1433
2012 Nov. 13 Tue. 22:08  -------- 29 D.Haj 01:09 Tue.  Nov. 15 Thurs. Muharram 1
2013 July 08 Mon. 07:14  --------  30 Sha. 10:15 Mon. July 09 Tue. Ramadaan 1
2013 Aug. 06 Tue. 21:51  --------  29 Ram. 00:52 Tue. Aug. 08 Thurs. Shawwaal 1
2013 Oct. 05 Sat. 00:34  --------  29 D.Qa. 03:35 Fri.  Oct. 06 Sun.  D. Hajjah 1

Hijri  1435

2013 Nov. 03 Sun. 12:50 29 D.Haj. 15:51 Sun.  --------  Nov. 04 Mon. Muharram 1
2014 June 27 Fri. 08:08 29 Sha. 11:09 Fri.  --------  June. 28 Sat. Ramadaan 1
2014 July 26 Sat. 22:42  --------  29 Ram. 01:43 Sat. July. 28 Mon. Shawwaal 1  
2014 Sept. 24 Wed. 06:14  --------   30 D.Qad. 09:15 Wed. Sep. 25 Thurs. D. Hajjah 1

 

PART III

யஸ்அலூனக்க அனில் அஹில்லா ! குல் ஹிய மவாகீத்து லின்னாஸி வல்ஹஜ் ! ....... (2:189). இந்த வசனத்திற்கு நபி(ஸல்) அளித்த விளக்கங்களை மறுபடியும் ஒருமுறை பாருங்கள்.

ஜஅலல்லாஹுல் அஹில்லத்த மவாகீத்த லின்னாஸி ஃப ஸூமு லிருய்யத்திஹி , வஅப்திரு லிருய்யத்திஹி ஃப'யின் கும்ம அலைக்கும் ஃப உத்து ஸலாஸீன யவ்மன்.

அபு ஹூரைரா : புஹாரி  

மனிதர்களுக்கு மாதத்தின் தவனையை அல்லது முடிவைக் காட்டவே அஹில்லா என்ற  (பிறைகள் தோன்றும்) மனாஸிலை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். (ஆனால் நாம் எழுதவும் , எண்ணவும் தெரியாத உம்மி சமுதாயத்தினராக உள்ளோம் அதாவது அந்த மனாஸிலை கணக்கிட்டுக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை.) எனவே (அஹில்லா என்ற அந்த பிறைகள் தோன்றும் மனாஸிலில் பிறை) தென்பட்டதிலிருந்து நோன்பு வைத்துக் கொள்ளுங்கள் : (மறுபடியும் அந்த மனாஸிலில் பிறை) தென்பட்டதும் நோன்பை முடித்துக் கொள்ளுங்கள் : உங்களுக்கு தென்படுவதை விட்டும் (அப்பிறை) மறைந்திருந்தால் மாதத்தை 30 நாட்களாக பூர்த்திசெய்து கொள்ளுங்கள்.

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். ஆதாவது ஒருதடவை 29 ஆகவும். ஓருதடவை 30 ஆகவும் இருக்கும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி): நூல்கள் : புகாரி , முஸ்லிம் , அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது தம் கைகளைத் தட்டி மாதம் இப்படித்தான் இப்படித்தான் என்று கூறினார்கள். மூன்றாவது தடவை தமது கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.

எனவே பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களைவிட்டும் அது மறைந்திருந்தால் (மாதத்தை) முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) :நூல்: முஸ்லிம்.

1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்த அறிவுப்புகள்தான் இது. இன்றிலிருந்து 50ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலக்கட்டத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைய மனித சமுதாயத்தின் வளர்ச்சிகள் அனைத்தும் இந்த 50 ஆண்டுகாலத்தின் குறுகிய காலக்கட்டத்தில் ஏற்பட்டதுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இந்த முன்அறிவுப்புகள் அன்றைய காலக்கட்டத்தில் முறையாக செயலாற்ற முடியாதிருந்த இந்த ஷரியத்தினை அதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும் நேரத்தில் முறையாகச் செயலாற்ற வேண்டும் என்பதையே உறுதிசெய்கின்றது.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாளில் தான் நோன்பு , நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் நோன்புப் பெருநாள். ஹஜ்ஜூப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் ஹஜ்ஜூப் பெருநாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) : நூல் :திர்மிதி

நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு இந்த மார்க்கச் சட்டத்தைப் பொருத்தவரையில் அதனைப்பற்றி முடிவெடுக்க வேண்டிய பொருப்பு அந்தந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல் அந்தந்தக் காலக்கட்டத்தில் வாழும் மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதையே உறுதிசெய்கின்றது.

அன்றைய சமுதாயத்தினர் அவர்களுக்கு இயன்ற முறையில் தத்தம் பகுதியில் மட்டுமே பிறையைக் கண்களால் கண்டு மாதங்களைத் தீர்மாணித்தார்கள். இன்றைய  சமுதாயத்தவர்களில்; சிலர் தகவல்களை ஏற்றும் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தூரத்தை அளவுகோளாக வைத்து தகவல்களையும் ஏற்கமறுக்கும் சாராரின் வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்றதே.

அவர்கள் தகவல்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்கு அளவுகோலாக காட்டும் அறிவிப்புகளை சிந்தித்துப் பார்த்தால் அந்த அறிவிப்புகளில் 30 நாட்கள் முடிவடைந்த பின்னர் கிடைக்கும் தகவல்களையே நபித் தோழர்கள் நிராகரிக்கின்றனர் என்ற உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். உரிய நேரத்தில் கிடைத்த தகவல்களை நபி(ஸல்) ஏற்று செயல்பட்டுள்ளார்கள் என்பதை ஹதிஸ் கிரந்தங்களிலிருந்து காணமுடிகின்றது. எனவே இங்கு தூரம் அளவுகோல் அல்ல. காலம் மட்டுமே அளவுகோலாகும்.

இன்ஷா அல்லாஹ் இன்றைய சமுதாயத்தவர்களாகிய நாம் உலகளாவி ஒன்றுகூடி நிறைவேற்ற வேண்டிய இந்த ஷரியத்தினை இப்போது ஒட்டுமொத்த சமுதாயமாக ஓரணியில் திரண்டுநின்று நிலைநாட்டுவோம். இந்த ஷரியத்தை நிலைநாட்ட வேண்டிய பொருப்பும் நம்மிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பின்படி ஹாஜிகள் அரஃபாவில் ஒன்றுகூடுகின்ற தினத்தில் உலகின் ஏனையோர் அரஃபா நாளின் நோன்பை நோற்க வேண்டும். அடுத்த நாளாகிய அறுத்துப்பலியிடும் நாளை உலகின் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் பெருநாள் தினமாக கொண்டாட வேண்டும். நாம் இவ்வாறு செயலாற்றினால் மட்டுமே கீழ்கண்ட நபி(ஸல்) அவர்களின் கட்டளையை நிலை நாட்டியவர்கள் ஆவோம்.

'நோன்புப் பெருநாள், ஹஜ்ஜிப் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாள் தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.'

அறிவிப்பவர் :அபூஹூரைரா(ரழி), ஆயிஷா(ரழி), அபூஸயீத்(ரழி): நூல்:முஸ்லீம்

இன்று இறைவனின் திருத்தூதர் திருநபி(ஸல்) அவர்கள் நமக்காக விட்டுச்சென்றுள்ள இந்த ஷரியத்தை (மார்க்கச் சட்டத்தை) முறையாக நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி மக்காவை மையமாகவைத்து அறிவிக்கப்படும் நட்களில் மட்டுமே உலக முஸ்லிம்கள் அனைவரும் நோன்பைத் துவங்க வேண்டும். நோன்புப் பெருநாளையும் , ஹஜ்ஜிப் பெருநாளையும் கொண்டாட வேண்டும்.

தத்தம் பகுதியில் பிறைகண்டதின் அடிப்படையில் மட்டுமே செயல்படுவோம் என்று எவரேனும் இதற்கு மாறு செய்வார்களேயானால் நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பின்படி அவர்கள் தங்களுடைய அமல்களை நாசம் செய்துவிட்ட நஷ்டவாளிகளே ஆவார்கள்.

இந்த ஷரியத்தை செயலாற்றும் விஷயத்தில் ஒரு சாதாரண நிலையிலிருந்த ஒரு நடுநிலைச் சமுதாயம் இன்று இறைவனின் திட்டத்தின்படி தீர்க்கமான முடிவுடன் ஒரு உயர்ந்த அறிவுப்பூர்வமான நிலைக்கு உயர்த்தப்படுகின்றார்கள். இது இறைவனின் வல்லமையையும் , அவனே இவ்வுலகைப் படைத்து , பரிபாலித்து , நிர்வகித்துக் கொண்டிருப்பவன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகவும் அமைந்துள்ளது. இறைவனின் சட்டத்தை அவனுடைய திட்டத்தின்படியே நிலைநாட்ட வேண்டிய பொருப்பு இன்று நம்மிடம் சுமத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் முன்னோக்குவதற்கான கிப்லாவை பைத்துல் முகத்தஸிலிருந்து மக்காவின் பைத்துல் ஹராமுக்கு மாற்றிக் கொள்ளுமாறு இறைவன் கட்டளையிட்டபோது ஏற்பட்ட நிலைகளை இறைவன் திருமறையில் எவ்வாறு பதிவு செய்கின்றான் என்பதையும் பாருங்கள்.  

'மக்களில் அறிவீனர்கள், (இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?) இவர்கள் முன்னோக்கிக் கொண்டிருந்த கிப்லாவைவிட்டும் இவர்களைத் திருப்பியது எது? என நிச்சயம் கேட்பார்கள். (நபியே!) நீர் கூறும் : கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களை அவன் நேரான வழியில் செலுத்துகின்றான். மேலும் இவ்வாறே (முஸ்லீம்களான) உங்களை நாம் (உம்மத்தன் வஸத்தன்) நடுநிலையிலுள்ள சமுதாயமாக ஆக்கியுள்ளோம் : (அதன் நோக்கம்) நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக!   

இந்த மாற்றம் மிகக் கடினமனதாகவே இருந்தது. ஆனால் அல்லாஹ் காட்டிய நேர்வழியைப் பெற்றிருந்தவர்களுக்கு அது சிறிதும் கடினமாக இருக்கவில்லை. அல்லாஹ் உங்களுடைய நம்பிக்கையை ஒருபோதும் வீணாக்கிவிடமாட்டான் : நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடத்தில் அளப்பரிய கருணையும், மிகுந்த பரிவும் உடையவன்.'   

 

(2:142.143)


''நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே : அவன் வானங்களையும் , பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் : பின்னர் தன்னுடைய காரியங்களை நிர்வகிக்கும் பொருட்டு அர்ஷின் மீது நிலையானான்.''

(10:3)


காலக்கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்.


(6:96)


' நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் இ பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். '  என்ற தன்னுடைய வல்லமைக்கு ஆதாரமாகவே சூரியனையும் சந்திரனையும் இந்த அகிலத்தின் காலக்கணக்கினை மனிதன் அறிந்துகொள்வதற்கான அவனுடைய திட்டமிட்ட ஏற்பாடு என்றும் இந்த அகிலத்தைப் படைத்தவன் அல்லாஹ்தான்  என்பதற்கான உறுதிமிக்க ஆதாரமாகவும் பறைசாற்றுகின்றான்.


' நம்பிக்கை கொண்டவர்களே ! நீங்கள் அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள்: (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுக்காக உங்களுடைய காரியங்களை சீராக்கி வைப்பான்: மேலும் உங்களுடைய குற்றங்களை மன்னிப்பான்: அன்றியும் எவன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றானோ, அவன் மகத்தான வெற்றி அடைந்துவிட்டான்.'

' நம்பிக்கை கொண்டவர்களே ! நீங்கள் அல்லாஹ்வை (அவனுடைய மார்கச்சட்டங்களை பேணவேண்டிய விஷயத்தில்) அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி நடந்துகொள்ளுங்கள் : மேலும் முஸ்லிம்களாகவே அன்றி மரணிக்க வேண்டாம். '

(3:102)


' (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்தபின்னரும் யார் (கருத்து)வேறுபாடு கொண்டு பிரிந்துவிட்டார்களோ , அவர்களைப்போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்தகை யோருக்குக் கடுமையான வேதனையுண்டு. '

(3:105)


'' (இறுதித் தூதரின் சமுதாயமே ! அல்லாஹ் உங்கள்மீது அருள்புரிந்துள்ள) தீனை நிலைநாட்டுங்கள், அதில் பிரிந்துவிடாதீர்கள். ''

(42:13.)


ஸதக்கல்லாஹுல் அழீம் !


வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் !